Tuesday, 13 August 2013
கப்சா கனவு
கப்சா கனவு
நிலாவுல நட்சத்திர மீன் புடி
அங்க வடை சுடும் பாட்டியை
கொஞ்சம் தட்டி எழுப்பு
சோறு ஆக்கி மீன் குழம்பு
வைக்க சொல்லு ....
எத்தன காலம் நிலா பார்த்து
சோறு தின்னுவே
கொஞ்சம் நிலாவுல
சோறுதின்னு
என் அருமை செல்ல குழந்தைகளா
சும்மா ஜிஜிளுஜிலுனு
தமிழ் joke
தமிழ் joke
ஒருத்தன் டாக்டர்கிட்ட போய்ட்டு, "டாக்டர்.. வர வர என்
பொண்டாட்டிக்கு காது கேக்குறது குறைஞ்சுட்டே வர்ற மாதிரி தெரியுது?? என்ன
பண்ணலாம்?? டாக்டர்??"ன்ன்னு கேட்டான்..டாக்டர் சொன்னாரு..
"மொதல்ல ஒரு 15 அடி தூரத்துல இருந்து எதாவது பேசிப்பாரு..
அப்பவும் அவ திரும்பலைன்னா, கொஞ்சம் கிட்டப் போய்ட்டு பேசிப்பாரு.. அப்பவும் திரும்பலைன்னா
அவ பின்னாடி போய்ப் பேசிப்பாரு...
அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்ன்னு" சொன்னார்..
இவனும் வீட்டுக்கு போய்ட்டு பொண்டாட்டி கிச்சன்ல சமையல் பாத்திரத்தை
கழுவிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு
கேட்டான்.. அவ திரும்பலை..
இன்னும் கொஞ்சம் கிட்டக்க போய்ட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு
கேட்டான்.. அவ திரும்பலை..இன்னும் கொஞ்சம் கிட்டக்க போய்ட்டு, "என்னடி
சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..
கடைசியா அவ பின்னாடி போய் நின்னுட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ சொன்னா...
"நாலாவது முறையா சொல்றேன்.. இன்னிக்கு உப்புமா"ன்னு...!
சிரிப்போம் சிந்திப்போம்
சிரிப்போம் சிந்திப்போம்
அவர்;ஆமா ! பேஷன்ட் ஏன் தலை தெறிக்க ஓடுறாரு ?
இவர்;தலைவலி நு சொன்னார்.
டாக்டர் தலை எடுக்கனும்னு சொன்னாரு அதான்...
அவர்; ரொம்ப அநியாயமல்ல இருக்கு ..
இவர்; இல்ல ..டாக்டர் எக்ஸ்ரே எடுக்கனும்னு சொன்னதை அவர் அப்டி புரிஞ்சுகிட்டார் .
==============================================
கட்சிக் காரர்;வீடு, நிலம், நகை எல்லாத்தையும் அடமானம் வெச்சு கட்சிய ஆரம்பிச்சேன் ...
நண்பர்;அப்புறம் ?நல்லாதானே இருக்கீங்க ..
கட்சிக் காரர்;எங்க நல்லா இருக்குறது ...வாழ விட மட்டென்றங்கலெ ..
நண்பர்;ஏன்?
கட்சிக் காரர்;அத மீட்க லஞ்சம் வாங்கினேன் ...
நண்பர்;தப்பில்லையா?
கட்சிக் காரர்;அதில்லைய்யா ?லஞ்சம் வாங்கினேன்னு என் பிள்ளை என்ன பிடிச்சு உள்ள போட்டுட்டான் ..
நண்பர்;உங்க பிள்ளை என்ன பண்ணுறாரு ?
கட்சிக் காரர்;எஸ் ஐ யா இருக்கான்
நண்பர்;தப்பிப் பிறந்த பிள்ளைனு சொல்லுங்க ..உங்கள உள்ள தள்ளினது சரிதான் ...
கட்சிக் காரர்;என்னய்யா? நீயுமா?
நண்பர்;என் பையன் காலேஜ் சேருரதுக்கு லஞ்சம் வாங்கிநல்ல...அதான் உன் பைய்யன் ஜெயிலில தள்ளிட்டான்
''முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ''நு தெரியாமையா சொன்னாங்க...
கட்சிக் காரர்;?????
CCC - Get Together Function
In our daily life, we encounter people who are angry, deceitful, intent only on satisfying their own needs. There is so much anger, distrust, greed, and pettiness that we are losing our capacity to work well together.
ராகம்: (துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் வரும்
"இன்னிசை பாடிவரும்" என்ற பாடல்)
ஷிப் ஒன்று மூழ்கி விட்டால்
கடலும் கரைவதில்லை -நம்
பிரண்ட்ஷிப் மூழ்கி விட்டால்
இந்த மூச்சிக்கு இடமில்லை
நம் உதடு சிரிக்குது
ஆனால் உள்ளம் அழுகுது
உயிரும் கரையுது துள்ளும் கண்கள் கலங்குது
இந்த வாழ்க்கையே ஒரு பிரிவுதான்
அது இன்று நிஜமாகிறது .............
(ஷிப் ஒன்று)
இதயம் ஒன்று இல்லாமல் சுவாசங்கள் கிடையாது
சுவாசங்கள் நின்றாலோ உயிர் வாழ முடியாது
நண்பர்கள் போதுமே எங்கள் உயிர்கள் வாழுமே
நட்பொன்று போதுமே எங்கள் எதிர்கள் வீழுமே
எங்கள் நட்பு எதுவரை
ஏழாம் ஜென்மத்தில் எரியும் வரை
எரிந்த நட்பும் உயிர்த்தெழுந்தால்
மறுமையில் சுவர்க்கத்தில் நாம்தலுவோம்
அட பாடல் போல வாடல் கூட ஒரு சுகமே ...................
(ஷிப் ஒன்று)
தாய் ஒருவள் இல்லாமல்
சேய் இங்கு கிடையாது -இன்று
தாய் எங்கோ சேய் எங்கோ
தனியாக போறது .........
இதனால் கண்கள் நீரை இழக்கிறது
ஆனால் குருதி வடிகிறது
குருதியும் ஏனோ ருசிக்கிறது
நண்பர்கள் விழிகளில் வசிப்பதினால்
அட பாடல் போல வாடல் கூட ஒரு சுகமே ...........
(ஷிப் ஒன்று)
தப்ரேஜ்
..................................................................................................................................................................
"இன்னிசை பாடிவரும்" என்ற பாடல்)
ஷிப் ஒன்று மூழ்கி விட்டால்
கடலும் கரைவதில்லை -நம்
பிரண்ட்ஷிப் மூழ்கி விட்டால்
இந்த மூச்சிக்கு இடமில்லை
நம் உதடு சிரிக்குது
ஆனால் உள்ளம் அழுகுது
உயிரும் கரையுது துள்ளும் கண்கள் கலங்குது
இந்த வாழ்க்கையே ஒரு பிரிவுதான்
அது இன்று நிஜமாகிறது .............
(ஷிப் ஒன்று)
இதயம் ஒன்று இல்லாமல் சுவாசங்கள் கிடையாது
சுவாசங்கள் நின்றாலோ உயிர் வாழ முடியாது
நண்பர்கள் போதுமே எங்கள் உயிர்கள் வாழுமே
நட்பொன்று போதுமே எங்கள் எதிர்கள் வீழுமே
எங்கள் நட்பு எதுவரை
ஏழாம் ஜென்மத்தில் எரியும் வரை
எரிந்த நட்பும் உயிர்த்தெழுந்தால்
மறுமையில் சுவர்க்கத்தில் நாம்தலுவோம்
அட பாடல் போல வாடல் கூட ஒரு சுகமே ...................
(ஷிப் ஒன்று)
தாய் ஒருவள் இல்லாமல்
சேய் இங்கு கிடையாது -இன்று
தாய் எங்கோ சேய் எங்கோ
தனியாக போறது .........
இதனால் கண்கள் நீரை இழக்கிறது
ஆனால் குருதி வடிகிறது
குருதியும் ஏனோ ருசிக்கிறது
நண்பர்கள் விழிகளில் வசிப்பதினால்
அட பாடல் போல வாடல் கூட ஒரு சுகமே ...........
(ஷிப் ஒன்று)
தப்ரேஜ்
..................................................................................................................................................................
..................................................................................................................................................................
உபசார நாள் கவிதை
தன் கூட்டினிலே இருந்து
தன்னை முழுமையாக
வலுப்படுத்திக்கொண்டு,
அக்கூட்டைவிட்டு
வெளிவரத்துடிக்கும்
ஒரு பட்டாம்புச்சியின்
மனநிலையோடு,
என் முன்னால் வீற்றிருக்கும்
அருமை தோழர்களே,
உங்கள் அனைவருக்கும்
என் பணிவான வணக்கங்கள்...
இந்த வருடம்
உங்கள் அனிவரின்
வாழ்க்கைகளை
வலமாக மாற்றும்
மாற்றங்கள் பற்றபல
பிரவேசிக்க,
அம்மாற்றங்களை
மாபெரும் வெற்றிகளாய்
மாற்றும் மனத்தன்மை
உணகளுக்குள்
துளுதிருக்க,
வேகமாக நடைபோட்டுக்
கொண்டிருக்கும் நீங்கள்,
கிட்டத்தட்ட மறந்திருக்கக்கூடும்
உங்கள் நட்பின்
பிரிவை பற்றி....
பாரி வல்லலனதால்தான்
முல்லைக்கு தேர் கொடுத்தான்,
அதுவே
அவன் நண்பனாயிருந்திருந்தால்
முல்லைக்கு தன்
தொல்கொடுதேந்தியிருப்பன்.....
இப்பள்ளி பருவதினிலே
தொல்கொடுதேந்திய
நட்புக்களைப் பற்றி
நினைத்துப் பார்க்கும்
நேரம் இது....
சின்னச்சின்ன சண்டைகள் - அதற்கு
சிலிர்த்துக்கொண்ட கோபங்கள்,
சில்லறை பிடிவாதங்கள் - பின்
சிரிப்புடன் சமாதானங்களாய்
நிறைந்த உங்கள் நட்பு,
வகுப்பில் செய்த குறும்புகளால்
வருத்தப்பட்ட நாட்கள்,
ஆசிரியர் அசதியாய் அமர்ந்தபோது
ஆரம்பமான அரட்டைகளாய்
நிறைந்த உங்கள் நட்பு,
தென்றல்த்தாகிய இல்லை போல,
மார்கழிக்காலை பனி போல,
தயங்கி மறையும் நிலா போல,
உலா போகும் மேகம் போல,
வளர்ந்து தேயும் பிறை போல,
சுமுகமாய் பிரியும் நேரம் இது....
இந்நேரத்தில்
உங்கள் நண்பர்களால்
விளைந்த நன்மைகளுக்கு
நன்றி என்ற ஒரு சொல்
ஈடுகொடுக்க முடியாவிடினும்,
உங்கள்
கருவிழி கரையோரம்
கசியும் கண்ணீர்த்துளி
அச்செயலை செய்யக்கூடும்
என்ற வாக்கியத்துடன்
எதிர்வரும் தடைகளை
தகர்த்தெறிய கார்த்திருக்கும்
என் அருமை தோழிகளே
உங்கள்
முன்னேற்ற முயற்சிகள்
அனைத்தும் வெற்றியில் முடிய
என் மனமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன்!....
Saturday, 10 August 2013
Independence Day
‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது
ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக்
கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும்
‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது.
ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம்
என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப்
புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன்
தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார்
அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில்
சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு
முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இருநூறு
ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த
போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு
எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி,
வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே
கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக
உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை, அந்நாளில் நாம்
களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் கொண்டாடுவோம். நமது
சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களும், புரட்சியாளர்களும் தள்ளாடும்
வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றியும் அதன்
வரலாற்றைப் பற்றியும் நமது இந்திய நாட்டின் பிரஜைகள் அனைவரும் தெரிந்து
கொள்வது அவசியம்.
ஆரம்பகால இந்தியா
‘தீப கற்பம்’ என்றும் ‘பாரத தேசம்’
என்றழைக்கப்படும் நமது நாடானது, மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்காளதேசம்,
எனப் பெருவாரியானப் பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தது. மன்னர்கள்
ஆட்சியில் மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும் இருந்த நமது நாடு, செல்வ
செழிப்பில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தது.
தென்னிந்தியாவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து, அவர்களது புகழை
மேன்மேலும் ஓங்கச் செய்தனர். இவர்களைத் தொடர்ந்து, இசுலாமியர்கள்
(1206–1707), தில்லி சுல்தானகம் (1206–1526), தக்காணத்து சுல்தானகங்கள்
(1490–1596), விஜயநகரப் பேரரசு (1336–1646), முகலாயப் பேரரசு (1526–1803),
மராட்டியப் பேரரசு (1674–1818), துர்ரானி பேரரசு (1747–1823), சீக்கியப்
பேரரசு (1799–1849) எனப் பலரும் நமது நாட்டின் எல்லைகளையும்,
செல்வங்களையும் விரிவுபடுத்துவதிலே மிகவும் கவனமாக இருந்தனர்.
மேலைநாட்டவர்களின் வருகை
விஜயநகரப் பேரரசு காலத்தில், நமது
இந்தியாவிற்குக் கடல்வழியாக முதன்முதலில் வந்தவர் தான், வாஸ்கோடகாமா.
‘வந்தோரை வாழவைக்கும் நாடெங்கள் நாடு’ என்ற பெருமை நமது இந்தியாவிற்குத்
தொடக்கத்திலிருந்தே உள்ளது. ஒரு போர்ச்சுகீசியரான அவர், கடல் வழியே
இந்தியாவிற்கு வழியைக் கண்டு பிடித்து, நமது நாட்டில் கால்பதித்தார். இவரது
வருகையைத் தொடர்ந்து, இந்தியாவில் உணவுக்கு சுவை சேர்க்கும் கறிமசாலா
பொருட்கள் இருப்பதை அறிந்த ஐரோப்பியர்கள், அதைத் தங்களது நாடுகளுக்கு
விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட எண்ணி, கோழிக்கோடு துறைமுகத்தில்
1498-ஆம் ஆண்டு வந்திறங்கினர். இதுவே, பண்டமாற்று முறைக்கு வித்திட்டது.
போர்ச்சுகீசியர்கள் இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன்
மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர்.
இவர்களைத் தொடர்ந்து, டச், ஆங்கிலேயர்கள் போன்ற அந்நிய நாட்டவர்கள் நமது
நாட்டிற்கு வருகைத் தந்ததால், அவர்களும் போர்ச்சுகீசியர்கள் போலவே வாணிக
முகாம்களை அமைக்க எண்ணி, சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர். 1619
ஆம் ஆண்டில், பிரெஞ்சுகாரர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். வாணிகம் என்ற
பெயரில் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழையும் ஐரோப்பியர்கள், நாட்கள் செல்ல
செல்ல அந்நாட்டின் சிம்மாசனப் பொறுப்பைக் கைப்பற்றுவர். அதற்கேற்றவாறு, பல
நாட்டவரும் இந்தியாவுக்குள் நுழைந்ததால், பல போர்களும், குழப்பங்களும்
நிலவியதால், ஐரோப்பியர்கள் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர்.
ஆனால், தாங்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளையும், ஒரே நூற்றாண்டில்
ஆங்கிலேயர்களிடம் இழந்தனர்.
ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி
ஐரோப்பியர்களை மிகவும் சூழ்ச்சியால் வென்ற
ஆங்கிலேயர்கள், இந்தியாவில் இருந்து வாணிகம் செய்து வந்ததோடு
மட்டுமல்லாமல், அப்போதைய முகலாயப் பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற
பின்னர், இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு அவர்களது கிழக்கிந்திய
கம்பெனியையும் நிறுவினர். நாளடைவில் அவர்கள் வரி செலுத்தாமலேயே வாணிகம்
செய்ததால், அவர்களை வங்காளத்தின் நவாப் ‘சிராஜ் உட துலாத்’ என்பவர்
எதிர்த்ததால், 1757 ஆம் ஆண்டில், ‘பிளாசி யுத்தம்’ தொடங்கியது. இதில்,
நவாப் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றதால், அவர்கள் இந்தியாவில் உள்ள
நிலங்களை ஆக்கிரமிக்கத் துவங்கினர். இதையடுத்து, 1764 ஆம் ஆண்டில் பக்சார்
போரிலும் வெற்றிப் பெற்று, வங்காளத்தை ஆட்சி செய்ய அப்போதைய முகலாயப்
பேரரசரிடம் அனுமதிப்பெற்றதால், இந்தியா முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள்
வர அதுவே, முதன்முதல் காரணமாக இருந்தது. இதன் பின்னர், வரிகள், நிலங்கள்
கையகப்படுத்துதல், போன்றவற்றால் இந்தியா பஞ்சம் வரும் நிலைமைக்குத்
தள்ளப்பட்டது. 20 மில்லியன் மக்கள் ‘கிரேட் பாமின் ஆஃப் 1876–78’ மற்றும்
‘இந்தியன் பாமின் ஆப் 1899–1900ல்’ மடிந்ததொடு மட்டுமல்லாமல், ‘மூன்றாம்
பிளக் பாண்டமிக்’ என்ற கொடிய நோயால் மேலும் 10 மில்லியன் மக்கள் செத்து
மடிந்தனர். கிழக்கிந்திய நிறுவனத்தால், ஏற்பட்ட இத்தகைய மாபெரும் இழப்பைக்
கண்டு வெகுண்டத் துடிப்பான இளைஞர்கள் பலரும் இணைந்து, ‘1857 இந்திய கலகம்’
என்ற இயக்கத்தை முகாலாயப் பேரரசர் பகதூர் ஷா சபர் அவர்களை மானசீக
தளபதியாகக் கொண்டு உருவாக்கினர். இதுவே, ‘முதல் இந்தியப் போர்’ என்று
அழைக்கப்பட்டது. ஒரு வருடமாகப் போராடிய பின்னர், இவ்வியக்கத்தைத் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதன் தளபதியையும் நாடு கடத்தி, முகலாய
வம்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர், ஆங்கிலேயர்கள்.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்
முதல் இந்தியப் போரைத் தொடர்ந்து, தனது
அதிகாரத்தை நேரடியாக செயல்படுத்த முடிவெடுத்தனர், ஆங்கிலேயர்கள். என்னதான்
ஆங்கிலேயர்கள் ஒருபுறம் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்து கொண்டே
இருந்தாலும், நமது இந்தியர்கள் ‘முதல் இந்தியப் போரைத்’ தொடர்ந்து, பல
போராட்டங்களிலும், கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். 1867ல்
‘கிழக்கிந்திய கூட்டமைப்பை’ தாதாபாய் நவ்ரோஜியும், 1876ல் ‘இந்திய தேசிய
கூட்டமைப்பை’ சுரேந்திரநாத் பானர்ஜியும் உருவாக்கினர். 1877 ஆம் ஆண்டில்,
விக்டோரியா மகாராணி டில்லியில் முடிசூட்டப்பட்டதால், ஓய்வுபெற்ற
பிரித்தானிய பொதுப்பணி சேவகர் ஏ.ஓ.ஹ்யூமினால் இந்தியர்கள் பலரும்
தூண்டப்பட்டு, 1885ல் மும்பையில் எழுபத்து மூன்று இந்தியப் பிரதிநிதிகள்
இணைந்து ‘இந்திய தேசிய காங்கிரஸை’ நிறுவினர். சுவாமி விவேகானந்தர்,
ராமகிருஷ்ண பரமஹம்சர், பால கங்காதர திலகர், லாலா லஜபத் ராய், விபின் சந்திர
பாலர், வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஸ்ரீ அரபிந்தோ, சுப்பிரமணிய பாரதி,
சுப்பிரமணிய சிவா, பக்கிம் சந்திர சட்டர்ஜி, சர் சயீது அஹ்மது கான்,
ரபீந்திரநாத் தாகூர் மற்றும் தாதாபாய் நவ்ரோஜி போன்றோரின் உழைப்பு விடுதலை
உணர்வுக்கான புத்தெழுச்சியை பரவச்செய்தது.
1905ல், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும்
சூழ்ச்சியைக் கையாண்டார், அப்போதைய வங்காளத்தின் வைஸ்ராயும், கவர்னர்
ஜெனரலுமான கர்சன் அவர்கள். வங்காளப் பிரிவினையைக் கண்டு கொதித்த
இந்தியர்கள் பலரும், சுதேசி மற்றும் புறக்கணிப்புப் போராட்டங்களில்
ஈடுபட்டனர். முதல் இந்திய தேசியவாதியாக இருந்து, சுயராஜ்ஜியத்தை ஏற்றுக்
கொண்டார், பால கங்காதர திலகர். இதனால், தேசியவாதம் அடிப்படைவாதம் என இரண்டு
தலைமைகளில் காங்கிரஸ் இரண்டாக 1907ல் பிரிந்தது. தொடர்ச்சியான
வன்முறைகளும், கொந்தளிப்புகளும் நாட்டில் நிலவியதால், அதைத் தடுக்க எண்ணிய
ஆங்கிலேயர்கள், தலைவர்களான பால கங்காதர திலகர் மற்றும் வ.உ.சியை 1908 ஆம்
ஆண்டில் கைது செய்தனர். வங்காளப் பிரிவினையால் தொடர் போராட்டங்கள்
ஏற்பட்டதால், அந்தச் சூழ்நிலையைத் தணிக்க முயற்சித்த ஆங்கிலேயர்கள், 1911
ஆம் ஆண்டில், ஐந்தாம் ஜார்ஜ் டர்பாரில் என்பவரை இந்தியாவிற்கு
அனுப்பிவைத்தனர். அவர், வங்கப் பிரிவினையை மீண்டும் பெறப்போவதாக
அறிவித்ததோடு மட்டுமல்லாமல், டெல்லியின் வடக்குப்பகுதியில் கட்டப்படவிருந்த
நகரத்திற்கு தலைநகரத்தை கல்கத்தாவிலிருந்து மாற்றுவதாகவும் அறிவித்தார்.
முதல் உலகப் போரும், இந்தியர்களின் துணிவும்
உலகிலுள்ள நாடுகளுக்கிடையே நிலவிய
மோதல்கள் மற்றும் விரோத போக்குகளால் 1914ல் ‘முதல் உலகப் போர்’
ஆரம்பமானது. ஆங்கிலேயர்கள் நமது இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்ததால்,
அவர்களது போர் முயற்சிகளுக்கு நமது இந்தியா பெருமளவில் பங்களித்தது. முதல்
உலகப்போரின் பின்விளைவுகளாக உயர் உயிரிழப்பு விகிதம், உயர்ந்த பணவீக்கம்,
பரவிய இன்புளூயன்ஸா கொள்ளைநோய் மற்றும் போரின்போது ஏற்பட்ட வர்த்தகத்தின்
பாதிப்பு போன்றவை, இந்திய மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால், பிரித்தானிய ஆட்சியைத் தூக்கியெறிய இந்திய வீரர்கள் முற்பட்டனர்.
அச்சமயம், அதாவது, 1915 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி
எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த்
காந்தி அவர்கள், மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். இந்திய மக்கள்
ஆங்கிலேயர்களை எதிர்த்ததால், 1916ல் கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார்
வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல், 1918ல் ‘கறுப்புச் சட்டம்’ என்ற ‘ரௌலட்
சட்டம்’ ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். இதன் மூலம் ‘பத்திரிக்கைகளை
மூடுதல், விசாரணையின்றி அரசியல் செயல்பாடுகளை நசுக்குதல், மற்றும் கைதாணை
இல்லாமல் கலகம் அல்லது ராஜ துரோகத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் எந்த ஒரு
தனிநபர்களையும் கைது செய்தல்’ போன்ற அக்கிரமங்களை, அதிகாரம் என்ற பெயரில்
துஷ்ப்ரயோகம் செய்தனர், வைஸ்ராய்கள். மேலும், 1919ல், அமிர்தசரசில் ஜாலியன்
வாலாபாக்கில் கூடியிருந்த நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும்
குழந்தைகள் என்ற சந்தேகித்திற்கு இடமற்ற கூட்டத்தை நோக்கி சுடமாறு
பிரித்தானிய ராணுவத் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர்
ஆணையிட்டார். இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, இரண்டாக பிளவுற்ற காங்கிரஸ்
கட்சி, போராட்டங்கள், கிளர்ச்சிகள் எனப் பிரிந்திருந்த இந்திய மக்கள்
அனைவரையும் ஒன்று சேர்த்தது. 1920 ஆம் ஆண்டில், ‘கிலாபாத்’, ‘ஒத்துழையாமை
இயக்கம்’, ‘கம்யூனிஸ்ட் கட்சி’, ‘அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ்’
போன்றவைகள் உதயமானது. தனது நாட்டில் நிலவிய சூழலைத் தடுக்க மகாத்மா காந்தி
அவர்கள், முதல் சத்தியாக்ரஹ இயக்கத்தைத் தொடங்கி, ஆங்கிலேயர்களை
எதிர்த்தார். இதனால், காந்திக்கு 1922ல் ஆறுவருட சிறைதண்டனை
விதிக்கப்பட்டு, இரண்டாண்டுகளிலேயே விடுதலையும் செய்யப்பட்டார். 1929ல்,
டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசினார். இதை மிகவும் கடுமையாக
எதிர்த்த காந்தியடிகள், ‘அமைதியால் மட்டும் தான் சுத்தந்திரம் அடைய
முடியுமென்று’ எண்ணி, 1930 ஆம் ஆண்டில் ‘தண்டி யாத்திரை’ எனப்படும் ‘உப்பு
சத்தியாக்கிரகம்’ நடத்தினார். அப்போது தான் முதல் வட்ட மேசை மாநாடு
நடைபெற்றது. அடுத்த ஆண்டில், ‘காந்தி-இர்வின்’ ஒப்பந்தம் கையெழுத்தானதோடு
மட்டுமல்லாமல், அவர் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில்
இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். இந்த மாநாடு தோல்வியடைந்ததைத்
தொடர்ந்து, அவர் இந்தியா திரும்பினார். அதே ஆண்டில் தான் ஆங்கிலேயர்களை
எதிர்த்த பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவரும்
தூக்கிலிடப்பட்டார்.
இரண்டாம் உலகப் போரில் இந்தியா
கலந்துகொண்டது. மேலும், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு
தரப்பினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தனக்கு சாதகமாகப்
பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவை இரண்டு நாடுகளாகப்
பிரித்தனர். 1940ல் ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ மற்றும் 1942ல் ‘வெள்ளையனே
வெளியேறு தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டது. 1943 ஆம் ஆண்டில், நேதாஜி
இந்திய ராணுவத்தை தென்கிழக்காசியாவில் நாடுகடத்தப்பட்ட இந்திய
தேசபக்தர்களையும் ஜாப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து,
1946ல் ‘ஆர்ஐஎன் கழகம்’ எனப்படும் ‘கப்பற்படை எழுச்சி’ எழுப்பப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைதல்
சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும்,
கிளர்ச்சிகளையும் எழுப்பியத் தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட
களைப்படையவில்லை. ஆனால், பிரித்தானிய மக்களும், பிரித்தானிய ராணுவமும்
இந்தியாவில் மென்மேலும் அடக்குமுறையை ஏற்படுத்துவதற்கு
விருப்பமற்றிருந்தது. 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய
கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள், ஜூன் 3 ஆம்
தேதியன்று ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும்,
‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். இந்தத் தேசப்
பிரிவினையால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக
பிரிந்துசென்றது. மேலும், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி
நள்ளிரவில், சுதந்திர தேசமானது. சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால்
நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர்.
அவர்கள், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே
பதவியில் தொடரும்படி அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற அவரும், சிறிது
காலம் பதவியில் இருந்தார். பின்னர், 1948 ஆம் ஆண்டு ஜூனில் சக்கரவர்த்தி
ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார்.
சுதந்திர தின கொண்டாட்டங்கள்
ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு
முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த
மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி நலத் திட்ட
உதவிகளை வழங்குவார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக்கொடி
ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய பின்னர், விடுமுறை
அளிக்கப்படும். டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படும் இத்தினத்தில்,
நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு
வாழ்த்துகள் தெரிவித்து, உரையாற்றுவார். இவ்விழாவில், முப்படை அணிவகுப்பு,
நடனம், நாட்டியம் எனப் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
ஒவ்வொரு பிரஜைக்கும் முக்கியமான தினம் என்பதால், அனைவரும் தங்களது
வாழ்த்துகளை, இந்நாளில் தங்களது பிரியமானவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!
Wednesday, 7 August 2013
Sunday, 4 August 2013
பிரிவு
உன் பிரிவுகளை கண்டதனால்...
உன் நினைவுகள்
சுமந்த கவிதைகள் கூட
இன்று என்னில்
எழவும் மறக்கிறது
எழுதவும் மறுக்கிறது
உன் பிரிவுகளை கண்டதனால்.................
1.நீ பிரியும்
தருணத்தில் வழியனுப்ப
மனமில்லாமல்
பேசுவதற்கு வார்த்தைகள்
இல்லாமல்
நான் தவித்து நின்றேன்.
கன்னம் நனைக்கும்
கண்ணீருடன் நீ
சொன்னாய்.
"உனக்கு வர்ற
மனைவி கொடுத்துவச்சவடா"
என்று.
உன் பிரிவை விட
அதிகமாய்
வலிக்கிறது
உன் வாழ்த்து.
2. என்னை விட்டுப்
போகின்ற கடைசி
நாளில் நீ அழாமல்
போகவேண்டும் என்று
துடிக்கிறது மனசு.
என் பிரிவெண்ணி
அழாமல் போய்விடுவாயோ
என்றும் தவிக்கிறது அதே
மனசு.
முரண்பட்ட நினைவுகளில்
சிக்கித் தவிக்கிறது
உன் மீதான் என்
உயிர்ப்புள்ள காதல்.
3. எத்தனை முறை
காதலை கொடுத்த
இறைவனுக்கு
நன்றி சொல்லியிருப்போம்.
நம்மைப் பிரித்து
நன்றிக்கடன் செலுத்தும்
இறைவனுக்கு காதலின்
வலி தெரியுமா?
4. நீ எனக்காக அழ
நான் உனக்காக அழ
நமக்காக பாவம்
நாளெல்லாம் காதல்
அழுகிறது கண்மணி!
நாம் வாழ பிறந்தவர்களா
இல்லை அழ பிறந்தவர்களா?
.........................................
Saturday, 3 August 2013
My Cute World
தொடுபோது,
மழையில் தலை
துவடும்போது,
தட்டி கொடுத்து
உற்சாகபடுத்த
ஆளில்லாதபோதும்,
நினைவிகளில் நிழலாடுகிறது
அம்மாவின் அன்பு கைகள்
நாட்கள் உதிர்ந்தாலும்
நம் நட்பு உதிர்வதில்லை
My Best World
வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'............................ ...
உன்னை உணரவைப்பதும் நட்பு
உன்னை உயர்த்துவதும் நட்பு
நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு
உன் நண்பர்களைப் புரிந்துகொள்,
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக...
மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...
நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...
"உதிர்வது மலர்களாக இருக்கட்டும்
மலர்வது நம் நட்பாக இருக்கட்டும்!"
"உலகம் மாறலாம்
உண்மை மாறாது
பந்தம் மாறலாம்
பாசம் மாறாது
நாம் மாறலாம்
நாம் நட்பு என்றும் மாறாது!"
"காலங்கள் மாறலாம்
கனவுகள் மாறலாம்
நெஞ்சங்கள் மாறலாம்
நினைவுகள் மாறலாம்
நம் நட்பு மட்டும்
என்றும் மாறாது!"
I like Lecturer Posting
A lecturer is, in the broadest sense, a person who gives lectures or other public speeches. However, this article concerns lecturer as an academic rank.
In the United Kingdom a lecturer is usually the holder of an open-ended position at a university or similar institution, often an academic in an early career stage, who teaches and also leads or oversees research groups.
This contrasts with the practice in North America: the United States, Canada and other countries influenced by their educational systems, where the term is used differently. It generally denotes academic experts without tenure in the university, who teach full- or part-time but who have few or no research responsibilities within the institution where they teach. In most research universities in the United States, the title of lecturer requires a doctorate or equivalent degree.
In the United Kingdom a lecturer is usually the holder of an open-ended position at a university or similar institution, often an academic in an early career stage, who teaches and also leads or oversees research groups.
This contrasts with the practice in North America: the United States, Canada and other countries influenced by their educational systems, where the term is used differently. It generally denotes academic experts without tenure in the university, who teach full- or part-time but who have few or no research responsibilities within the institution where they teach. In most research universities in the United States, the title of lecturer requires a doctorate or equivalent degree.
Love
“Only once in your life, I truly believe, you find someone who can
completely turn your world around. You tell them things that you’ve
never shared with another soul and they absorb everything you say and
actually want to hear more. You share hopes for the future, dreams that
will never come true, goals that were never achieved and the many
disappointments life has thrown at you. When something wonderful
happens, you can’t wait to tell them about it, knowing they will share
in your excitement. They are not embarrassed to cry with you when you
are hurting or laugh with you when you make a fool of yourself. Never do
they hurt your feelings or make you feel like you are not good enough,
but rather they build you up and show you the things about yourself that
make you special and even beautiful. There is never any pressure,
jealousy or competition but only a quiet calmness when they are around.
You can be yourself and not worry about what they will think of you
because they love you for who you are. The things that seem
insignificant to most people such as a note, song or walk become
invaluable treasures kept safe in your heart to cherish forever.
Memories of your childhood come back and are so clear and vivid it’s
like being young again. Colours seem brighter and more brilliant.
Laughter seems part of daily life where before it was infrequent or
didn’t exist at all. A phone call or two during the day helps to get you
through a long day’s work and always brings a smile to your face. In
their presence, there’s no need for continuous conversation, but you
find you’re quite content in just having them nearby. Things that never
interested you before become fascinating because you know they are
important to this person who is so special to you. You think of this
person on every occasion and in everything you do. Simple things bring
them to mind like a pale blue sky, gentle wind or even a storm cloud on
the horizon. You open your heart knowing that there’s a chance it may be
broken one day and in opening your heart, you experience a love and joy
that you never dreamed possible. You find that being vulnerable is the
only way to allow your heart to feel true pleasure that’s so real it
scares you. You find strength in knowing you have a true friend and
possibly a soul mate who will remain loyal to the end. Life seems
completely different, exciting and worthwhile. Your only hope and
security is in knowing that they are a part of your life.”
Friendship Day
When we first talked to each other
I knew we would always be friends.
Our friendship has kept on growing
And I'll be here for you to the end.
You listen when I have a problem
And help dry the tears from my face.
You take away my sorrow
And put happiness in its place.
We can't forget the fun we've had
Laughing 'til our faces turn blue.
Talking of things only we find funny
People think we're insane-If they only knew!
I guess this is my way of saying thanks
For catching me when I fall.
Thanks once again for being such a good friend
And being here with me through it all.
Friday, 21 June 2013
Subscribe to:
Comments (Atom)


























